மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சிறாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் நபர்களை தூக்கிலிட வேண்டும்.
இது குறித்து 10 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய போது 99 வீதமானவர்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தனர்.
நாங்களுக்கு தேர்தல் மேடைகளில் இந்த விடயத்தை கூறி வந்திருக்கின்றோம்.
நாட்டுக்கு கெடுத்தியான பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு இப்படியான தண்டனைகளை வழங்குவது அவசியம்.
அரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அணி வகுப்பார்கள் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.