இந்த அரசாங்கத்தின் கணிப்பற்ற அரசியல் நாட்டை பிராந்திய ஆட்டத்திற்குள் சிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.