பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்து 6வது வாரம் தொடங்கிவிட்டது. இதுவரை 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த சீசனில் குறும்படம் வராமல் இருந்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல் நல்லவேளை ஐஸ்வர்யா ஒத்துக்கிட்டார் இல்லையென்றால் குறும்படம் போட வேண்டியிருந்திருக்கும் என்றார்.
ஆனால் இன்று அவர் ஹிந்தியில் பேசிய குறும்படத்தை போட்டுவிட்டார். இதை வைஷ்ணவி மொழி பெயர்த்து சொல்ல கோபமாகிவிட்டார் ஐஸ்வர்யா.
இப்போது வந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா, எனக்கு கவலையில்ல கவலையில்ல என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
பைத்தியமாகிவிட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.