Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மகன் திடீரென மரணம் – அதிர்ச்சியில் தாய்

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மகன் திடீரென மரணம் – அதிர்ச்சியில் தாய்

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த 38 வயதான ஜோசெப் அருள்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று தேனீர் குடித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், திடீரென மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்து வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த மகன் திடீரென மரணம் அடைந்தமை, தாயாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv