Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்

A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர் எனவும் ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv