Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர்: விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர்: விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் நேற்று காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்தவர் என்றும், இது தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv