Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர்.

இறுதி யுத்தத்தின் போது குறித்த ஆயுதங்களை கைப்பற்றிய இராணுவத்தினர் அவற்றை புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் காட்சிப்படுத்தி பின்னர், புதுமாத்தளன் பகுதிக்கு இடம் மாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஆயுதங்களை இலங்கையில் பல்வேறு இடங்களில் இருந்து செல்லும் பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர். அண்மையில் சர்வதேச பெண் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த நீர்மூழ்கி கப்பலை ஆய்வு செய்திருந்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv