Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை அடங்கிய தொகுக்கப்படாத காணொளி காட்சிகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 5 இலத்திரனியல் ஊடகங்ளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்தால், இலங்கை அரசியலமப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தேரர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv