Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார்.

இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்கள், யுவதிகள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv