தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட யாழ். அஞ்சல் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.