கிளிநொச்சியில் கிராமம் ஒன்றுக்குள் வந்த சிறுத்தை புலி கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தை செயற்படுத்தி, பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்து மக்களை தாக்கிய சிறுத்தை ஒன்றை கிராம மக்கள் நேற்று அடித்து கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.