Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு

வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மற்றைய சகோதரியான 7வயதான சரனிக்கா எனும் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் தனது ஏழு வயதில் இதே நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தில் தொடர்ந்து சிறார்களின் உயிரிழப்பு நடந்தமை வவுனியாவை அதிர வைத்ததுள்ளதுடன் வவுனியாவை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv