Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

இன்று காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் துவான் தில்கான் (வயது 24) என்ற இளைஞர் ஆற்றுக்கு குளிக்க சென்ற பின்னர் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

குறித்த இளைஞன் இன்று காலையில் தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். சகோதரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர்.

பின் இவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய பொழுது இளைஞன் சடலமாக ஆற்றில் காணப்படுவதை கண்டுள்ளனர். சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv