சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் வீரகெட்டிய இளைஞர் படையணி அலுவலகத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ஹெட்டியாராச்சிகே பிரேமதாச என்ற 53 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் பின்னர் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகஸ்தரின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொலையா அல்லது தற்கொலையா என்பது மர்மமாக உள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.