முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை தனது நிலைப்பாட்டை சூசகமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறும் ‘சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள்’ அமைப்பின் வருடாந்த மாநாட்டில் இது இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது.
இந்த மாநாட்டில் மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி முஹமத் இஸ்மத் ரம்ஸி, முன்னாள் சுற்றுலாத்துறைத் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா, தொழிலதிபர் மனோ சேகரம், பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆசிரியர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.