Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணில் என நினைத்து மஹிந்தவை தாக்க முற்பட்ட மக்கள்!

ரணில் என நினைத்து மஹிந்தவை தாக்க முற்பட்ட மக்கள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகனம் சுற்றி வளைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரணில் என நினைத்து தனது வாகனத்தை பொது மக்கள் தாக்க முயற்சித்தாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

காலி சமனல மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட நாட்களில் நான் எனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எரிபொருள் பெற பொது மக்கள் குழுவொன்ற வரிசையாக நின்றனர்.

இதன்போது ரணிலின் வாகனம் என நினைத்து பொது மக்கள் எனது வாகனத்தை சுற்றிவளைத்து கூச்சலிட ஆரம்பித்தனர்.

அந்த சம்பவம் இடம்பெற்ற போது சற்று மாலை நேரமாக இருந்தது. இதனால் பொது மக்கள் ரணில் என நினைத்து “ரணில் எங்களுக்கு எரிபொருளை கொடுத்து விட்டு செல்” என அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

நான் உடனடியாக வாகனத்தின் ஜன்னலை கீழே இறக்கிவிட்டு “நான் ரணில் அல்ல” என தெரிவித்தேன். “சர் நீங்களா? மன்னித்து விடுங்கள்… நாங்கள் ரணில் என நினைத்தோம்” என மஹிந்த கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv