Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள்.

135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது.

போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கும். பின்னர் போதை பொருட்களால் உடல் நலம் கெடுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற 135 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மாணவர்களிடம் தனிமை, கவலை மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தனிமை உணர்வு சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு மாற்றாக இருக்கிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv