Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv