Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv