பல தடைகளுக்கு நடுவே ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நிறைவை எட்டிக்கொண்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.
தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அபர்னதிஎல்லா விசயங்களையும் மிகவும் ஓப்பனாக பேசக்கூடியவர். இப்படியானவர்களுக்கு பேசும் விசயங்களே பிரச்சனையாக முடியும் என்பதால் அவர் அவுட் என்கிறார்கள்.
அதே போல அகாதா போலியாக இருக்கிறார் என ஏற்கனவே இதிலிருந்து வெளியே போனவர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் இவருக்கும் வாய்ப்பு குறைவு.
அதே வேளையில் சுஸானா இலங்கையிலிருந்து வந்தவர். அண்மையில் அவருடன் இலங்கை சென்று வீட்டிற்கெல்லாம் சென்று வந்தார் ஆர்யா. டோக்கன் ஆஃப் லவ் என்பது போல இருவருக்கும் நல்ல பொருத்தம் இருக்கிறது என்பது பலரின் எண்ணம். இதனால் இவரே ஆர்யாவின் மனைவி என்கிறார்கள்.
பொறுத்திருப்போம். என்ன நடக்கிறது என பார்ப்போம்…