Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ். விஜயம்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார்.

யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்.

பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதி செலவில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு 2 வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்த நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv