பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆயுதம் ஏந்தி வந்த குழுவினரால் குறித்த இலங்கையர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் குறித்த நபரின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரெஞ்சு தலைநகர் பகுதியில் இந்த கொடூரமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது மனைவியுடன் குறித்த உணவகத்தில் இரவு உணவு பெற்று கொண்டிருந்த இலங்கையரை ஆயுதம் ஏந்தி வந்த குழுவினர் இவ்வாறு தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் முழங்கால்கள், மணிக்கட்டு மற்றும் தலையில் கடுமையான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட இலங்கையர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.