Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர அனைத்து பிரதேசங்களிலும் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதியம் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்ய கூடும் எனவும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும்.

இடி, மின்னல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் கேட்டு கொண்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv