வவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கலைச்செல்வன் எனும் 28 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தாயார் இன்று காலை வேலைக்கு சென்ற சமயத்தில் குறித்த இளைஞர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
அத்துடன், இளைஞரின் சடலம் அயலவரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.