தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப் போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர் இன்று தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும் அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் திருச்சியில் இன்று அளித்துள்ள பேட்டியில் “ தமிழக மக்களை காக்க நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.
மக்கள் சக்தியை எப்படி திசை திருப்பவேண்டும் என்ற யுக்தி எனக்கு தெரியும். 3 நாட்களில் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆக நினைக்கிறார்கள். எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன் பேசுவார்” எனக் கூறியுள்ளார்.