பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பிரதமர் ரணில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.