Thursday , February 6 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இரு பிரதான கட்சிகள் இணைந்து நடத்திச் செல்லப்படும் சமகால அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது.

அதற்கமைய நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றஙம் ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவி அந்த கட்சிக்குள்ளேயும், சுதந்திர கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவிகள் அந்த கட்சிக்குள் மாற்றமடையும் எனவும் பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கைமைய அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

இந்த முறை இளம் அமைச்சர்கள் பலருக்கு பிரபல அமைச்சு பதவி கிடைப்பதற்கும், சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி இல்லாமல் போவதற்கும் அதிக ஆபத்துக்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv