நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது.
எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் கருஜயசூரியவிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நபர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.