Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!

நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv