Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ஜுலிக்கு விருது!! என்ன விருதுன்னு தெரியுமா?

ஜுலிக்கு விருது!! என்ன விருதுன்னு தெரியுமா?

தேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு ‘The Most Trending Face Of The Year 2017’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலி தான் ரொம்ப டிரெண்டான முகம் என்று கூறி விருதை அளித்துள்ளனர்.

தனக்கு இப்படி ஒரு விருதை வழங்கிய தேசி விருதுகள் 2017 குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ஜூலி. மேலும் மேடையில் விருது வாங்கும்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.விருது விழாவுக்கு சென்ற இடத்தில் எடுத்த செல்ஃபி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூலி

ஜூலிக்கு விருது கிடைத்துள்ளதை அறிந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv