தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்.
ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார்.
மேலும், சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க காமிட்டாகியுள்ளார்.
மேலும், இவரது மன்னர் வயகரா படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிகர் விமலுடன் இணைந்து ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அந்த பேட்டியில் விமலிடம் தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காத எரிச்சலூட்டும் நபர் யார் என்று ஓவியா மற்றும் ஜூலி என இருவரில் ஒருவரை தேர்வு செய்யுமாறு கேட்டார்கள். அதற்கு விமல் ஜூலியை தான் தேர்வு செய்தார்.
ஜூலி அருகில் இருந்தும் விமல் ஜூலியை தேர்வு செய்வது ஆச்சர்யம் தான்.
மேலும், அந்த பேட்டியில் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்திய அந்த தொலைக்காட்சியை தரக்குறைவாக பேசியுள்ளார்.