பிக்பாஸ் என்ற மாபெறும் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள், விளம்பரங்கள் என நிறைய நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு ஒரு உதவி செய்ய இருக்கிறார்.
அதாவது சற்குணம் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறாராம். அந்நிறுவனத்தின் லோகோவை ஓவியா தான் இன்று காலை 10 மணியளவில் தன்னுடைய டுவிட்டரில் வெளியிட இருக்கிறார்.