Monday , August 25 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல்

லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல்

லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கார் மூலம் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அங்குள்ள பெங்காஸி என்ற நகரம் அருகே உள்ள மசூதி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தில் வைத்து வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அடுத்தடுத்த இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலில் 22 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv