யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் 4 கண்ணிவெடிகள், 2 மோட்டார் குண்டுகள், 2 சார்ச்சர் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
“கடலில் நேற்று மாலை 5 மணியவில் பச்சை நிற மரப் பெட்டி ஒன்று மிதப்பதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர். அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் மரப் பெட்டியை மீட்டனர். பெட்டி சோதனையிடப்பட்டது. அதனுள் வெடிபொருள்கள் காணப்பட்டன.
மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நீதிமன்ற அனுமதியுடன் வெடிபொருள்கள் செயலிழக்கச் செய்யப்படும்.”- என்று பொலிஸார் தெரிவித்தனர்.