முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு மற்றும் தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்துள்ளது.
முள்ளியவளை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் ஜனுராஜ் (வயது -20), முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கராசா டியானு (வயது-20) ஆகியோரே காயமடைந்தனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடனும், மற்றையவர் அடிகாயங்களுடனும் மாவட்ட மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பில் முடிந்தது என்றும், அதில் ஒரு குழு மற்றைய குழு மீது முள்ளியவளை சந்தைக்கு அண்மித்த பகுதியில் வைத்து வாள், கோடரிகளால் தாக்குதல் நடத்தியது என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.