கமல்ஹாசன் குடியரசு தினத்தை ஒட்டி தன் தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தின் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவிட்டார்.
தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இதற்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள், கட்சியின் சின்னம், பெயர் என பலவற்றிற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அவரின் 2.0 படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து ரஜினி மதுரையில் பெரிய மாநாடு ஒன்றை நடத்தவுள்ளாராம். இதன் மூலம் ஆதரவை பலப்படுத்துவதோடு மக்களின் நிலையை அறிய இப்படியான திட்டமாம்.
அங்கேயே கட்சியின் பெயர், சின்னம் என பல விசயங்களை அறிவிக்க இருக்கிறாராம்.