உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி பெரு வெற்றிபெற்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாம் இணையமாட்டோம். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பன்னாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு கூறியுள் ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணிக் கட்சியின் தலைவர் நானில்லை. அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும் நான் ஏற்கவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சுதந்திரக் கட்சியுடனோ சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி இணையாது என்றார்.