Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எல்லோா் மீதும் காட்டும் இரக்கமும், கருணையும் வெற்றியைத் தரும்!

எல்லோா் மீதும் காட்டும் இரக்கமும், கருணையும் வெற்றியைத் தரும்!

மனித நேயத்தை முன்னிலைப்படுத்திய உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தெய்வீகத் தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக் கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

மனித நேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சல ஆயுதங்களையும் மௌனிக்கச் செய்து, அமைதியின் பாதையில் எதிர்காலத்தைப் பிரகாசமடையச் செய்ய நத்தார் நல்வழிகாட்டியாக அமையும்.

விவேகமும் சமத்துவமும் அற்ற குரூரத்தனம் வேரூண்றியிருந்த காலப் பகுதியிலேயே இயேசு பிரான் பூமியில் அவதரித்தார்.

அவர் தெய்வீக வரம் பெற்றவராக இந்த பூமியில் பிறந்திருந்த போதிலும் சமூகத்தின் தீமையினை நீக்குவதற்கான வழிகாட்டுதலை ஒரு சாதாரண மனிதர் தமது வாழ்வில் எதிர்நோக்க நேரிடும்.

அனைத்து இடையூறுகளையும் அனுபவித்தவாறே அவர் உலக மக்களுக்கு தமத அனுபவங்களை வழங்கினார்.

இதனாலேயே மனிதாபிமானத்தின் ஆழத்தையும் அதில் இருக்கவேண்டிய முன்மாதிரியான குணங்களையும் உலக மக்கள் சரியாக இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

தற்கால உலக மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாரிய சவால்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழிமுறையும் அதனுள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

எல்லோா் மீது காட்டும் இரக்கம், கருணை ஆகியன தமக்கு வெற்றியைத் தருவதுடன் ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே சகவாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பதும் தெளிவாகின்றது.

மனித நேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல ஆயுதங்களையும் மௌனிக்கச் செய்து அமைதியின் பாதையில் எதிர்காலத்தைப் பிரகாசமடையச் செய்ய இத்தகைய பயண பாதையில் பயணிப்பதன் மூலமே இயலும்.

உலகவாழ் சகல கிறிஸ்தவ மக்களுக்கும் அமைதியும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv