Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ரயில் தடம் புரண்டு விபத்து

ரயில் தடம் புரண்டு விபத்து

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக்(AMTRACK) ரயில் சென்று கொண்டிருந்தது.

ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …