Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / வடக்­கில் தனி­ய­ரசு

வடக்­கில் தனி­ய­ரசு

புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து வடக்­குக்கு முத­லீ­டு­கள் அவ­சி­யம் எனில், வடக்கை தனி அர­சா­கப் பிரித்­துத் தரு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட அமைச்­சுக்­கள் மீதான குழு­நிலை விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­னார்.

‘வெளி­நா­டு­க­ளில் புலம்­பெ­யர் சமூ­கத்­தி­னர் செல் வச் செழிப்­போடு வாழ்­கின்­ற­னர். ஆடம்பர விடுதிகள் மற்­றும் சுற்­று­லாத்­துறை சார்ந்த விட­யங்­க­ளுக்­காக அவர்­கள் வடக்­கில் முத­லீடு செய்­ய­வேண்­டும். வடக்கு மக்­கள் மீது அன்­பும் ஆத­ர­வும் இருந்­தால் கட்­டா­யம் இதைச் செய்ய வேண்­டும்’ என்று அமைச்­சர் ஜோன் அம­ர­துங்க வெளி­யிட்­டி­ருந்த கருத்­துக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யி­லேயே சார்ள்ஸ் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

‘ஏனைய மாகா­ணங்­க­ளில் சுற்­று­லாத்து­றைக்கு செல­வி­டப்­ப­டு­வது போன்றே வடக்­குக்­கும் சுற்­று­லாத்­து­றை­யில் நிதி செல­வி­டப்­படவேண் டும். இதன்­பொ­ருட்டு 5 வருட வேலைத்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்’ என்­றும் அவர் கூறி­னார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv