Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!

கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!

முல்லைத்தீவு பெருங்கடலுக்கு நள்ளிரவில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மீன்பிடி தொழிலாளர்களின் இரண்டு மீன்பிடி படகுகளே கரைதிரும்பவில்லை என அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இவர்களின் தொடர்பு கரைக்கு கிடைத்துள்ளதாக குறித்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில், பெறுமதியான வலைகளின் ஒருபகுதி கடல்நீரோட்டத்தை எதிர்கொண்டு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மீதி வலையை மீட்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் கரை திரும்பாத மீனவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv