தாழமுக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்கும் வகையில் முன்னேற்பாட்டுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை நடக்கவுள்ளது.
அந்தமான் தீவுகளில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் இந்தியா நோக்கி நகரும்போது வடக்கு கடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படின் அதனைத் தடுப்பதற்காகவே முன்னேற்பாடுக் கூட்டம் அவசர அவசரமாக மாவட்டச் செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவில் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.