Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / பிரதேச செயலகங்கள் அனைத்தும் நாளை திறக்கப்படும்

பிரதேச செயலகங்கள் அனைத்தும் நாளை திறக்கப்படும்

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளைய தினம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததுடன், அதற்குத் தேவையான நிதி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் கூறியுள்ளார்.

அதேவேளை மக்களுக்கு கிடைக்கின்ற காசோலைகளை மாற்றிக் கொள்வதற்காக களுத்துறை மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரச வங்கிகளையும் நாளைய தினம் திறக்குமாறும் வங்கிப் பொது முகாமையாளர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv