எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் (PAFFREL) கோரிக்கை விடுத்துள்ளது
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி ஒன்று பொருத்தமற்ற வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யுமாயின் அது தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்த தாம் தயார் எனவும் பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.