தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நிகராக ஆயுதப் புரட்சியை நடத்திய தலைவர் உலகில் வேறு யாரும் இல்லை என்பதலில் நான் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் 63 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலமே விடுதலைப்புலிகளை சிங்கள அரசால் தோற்கடிக்க முடிந்தது. ஆனால் தமிழர்களின் சிறந்த தலைவரான பிரபாகரனை தோற்கடிக்க முடியவில்லை.
இன்று இலங்கை மற்றும் இந்தியா, புலம்பெயர் நாடுகள் எங்கும், பிரபாகரனின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற வேளையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.