யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில வசதிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொழில்வாய்ப்புகள் குறித்த பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் தாம் சமர்ப்பித்த யோசனைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.