2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிள்களில் வருகை தந்திருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எடுத்துக்காட்டும் விதமாக மஹிந்த அணியினர் இவ்விதம் சைக்கிள்களில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
நல்லாட்சி எனக்குறிப்பிடப்படும் இந்த ஆட்சியில் மக்கள் சைக்கிள், மாட்டு வண்டி போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தாத வாகனங்களில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக, அங்கு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச சத்தமிட்டு கூறியவாறு நகர்ந்து சென்றுள்ளார்.