வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியாவிற்கு இன்று சென்றுள்ளார். இதனால் வடகொரியாவுடனான பதற்ற நிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.
டிரம்ப் சியோல் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே-இன் உடன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசப்படும். அவர் தென்கொரியாவிலுள்ள அமெரிக்க படைகளை பார்வையிட்டுள்ளார்.