Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!

வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுமிகளை, இலங்கையர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கான்பரா நகரில் வசிக்கும் சுனில் பட்டகொட என்ற 62 வயதுடைய நபரே, 14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

தற்போது குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கான்பரா நகரில் வசிக்கும் 62 வயதுடைய சுனில் பட்டகொட என்ற நபர், அந்நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு வரும் இளம் சிறுமிகளை கவரும் வகையில் அவர்களுக்கு பரிசில்களையும் பணத்தையும் கொடுத்து வந்துள்ளார்.

பின்னர் ஒவ்வொரு சிறுமியாக தனது இல்லத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களுக்கு போதைக் கலந்த பாணங்களை கொடுத்து சிறுமிகளை மயக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனை பல காலமாக அவர் செய்து வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமிகளுக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியமையால் இச்சம்பவங்கள் வெளிவராமல் இருந்துள்ளன.

எனினும் குறித்த சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் போது, அதனை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் தனது மகள், வயோதிபர் ஒருவடன் பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ ஒன்று பேஸ்புக்கில் இருப்பதை கண்டு தந்தை ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மகளிடம் தந்தை விசாரணை செய்த போது, குறித்த நபர் தொடர்பான விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

பின்னர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv