Friday , August 22 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / 2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்

2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்

நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் பெயர் சேபுல்லோ சாய்போவ் என தெரிய வந்தது. அவரிடம் இருந்த போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது ஒரு தீவிரவாதத்தின் கோழை செயல் என நியூயார்க் நகர மேயர் பில் டீ பிளேசியோ கூறியுள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என போலீசார் கூறினர். இந்த சம்பவத்தில் 2வது நபருக்கு தொடர்புள்ளது என தெரிய வந்தது. இதனை அடுத்து அந்நபரை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான 32 வயது நிறைந்த முகமது ஜாயிர் கடிரோவ் என்பவரது புகைப்படத்தினை எப்.பி.ஐ. அதிகாரிகள் வெளியிட்டனர். இவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்.

இந்த புகைப்படம் வெளியான ஒரு மணிநேரத்தில் கடிரோவின் இருப்பிடம் கண்டறியப்பட்டு உள்ளது என எப்.பி.ஐ.யின் உதவி இயக்குநர் வில்லியம் ஸ்வீனி கூறியுள்ளார். கடிரோவை பிடித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv